தேசியம்
கனேடிய தேர்தல் 2021 செய்திகள்

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: ஷோபிகா வைத்தியநாதசர்மா

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: ஷோபிகா வைத்தியநாதசர்மா (Rosemont – LA Petite – Patrie – Bloc Quebecois)

2021 கனேடிய பொது தேர்தலில் மொத்தம் பத்து தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஷோபிகா வைத்தியநாதசர்மா, Quebecகில் Rosemont – LA Petite – Patrie தொகுதியில் Bloc Quebecois கட்சி சார்பில் போட்டியிடுகின்றார்.

இவர் போட்டியிடும் முதலாவது தேர்தல் இதுவாகும். Quebec மாகாணத்தில் மாத்திரம் வேட்பாளர்களை களம் இறக்கும் Bloc Quebecois கட்சி சார்பில் ஒரு தமிழ் வேட்பாளர் போட்டியிடுவது இதுவே முதல் தடவையாகும்.
அதேவேளை Quebec மாகாணத்திலும் முதல் முறையாக ஒரு தமிழ் வேட்பாளர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார்.Rosemont – LA Petite – Patrie தொகுதியை கடந்த நாடாளுமன்றத்தில் NDP (Alexandre Boulerice) பிரதிநிதித்துவப்படுத்தியது.

கடந்த தேர்தலில் (2019) Boulerice 42.2 சதவீதம் வாக்குகளை பெற்றார்.இந்தத் தொகுதியில் Boulerice மீண்டும் போட்டியிடுகின்றார்.

 

Related posts

37 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

Manitobaவில் 3 குழந்தைகள், 2 பெண்கள் இறந்ததை அடுத்து சந்தேக நபர் கைது

Lankathas Pathmanathan

பதவி விலகாத David Johnstonனை விமர்சித்த NDP தலைவர்

Lankathas Pathmanathan

Leave a Comment