November 16, 2025
தேசியம்
செய்திகள்

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு கனடிய அரசியல் தலைவர்கள் கண்டனம்

இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதலை கனடிய அரசியல் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக இஸ்ரேலில் நடந்த மிக மோசமான தாக்குதலாக ஹமாஸ் போராளிகள் குழு சனிக்கிழமை (07) நடத்திய திடீர் தாக்குதல் அமைந்துள்ளது.

இந்த தாக்குதலில் குறைந்தது 70 பேர் பலியானதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இஸ்ரேலுக்கு எதிரான இந்த பயங்கரவாத தாக்குதலை கனடா வன்மையாகக் கண்டிக்கிறது என பிரதமர் Justin Trudeau கூறினார்.

இந்த வன்முறைச் செயல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் வாழ்க்கை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேல் உரிமையை முழுமையாக ஆதரிக்கிறோம் என கூறினார்.

ஹமாஸ் பயங்கரவாதிகளால் இஸ்ரேல் மீதான படையெடுப்பை கண்டிப்பதாக Conservative தலைவர் Pierre Poilievre ஒரு அறிக்கையில் கூறினார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய கொடூரமான தாக்குதல்களை NDP தலைவர் Jagmeet Singh கடுமையாக கண்டித்துள்ளார்.

ஹமாசின் இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதலை கனடா கண்டிக்கிறது என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly கூறினார்.

Related posts

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய வங்கி அறிவிப்பு

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் புதிய தலைமை குழுவை அறிமுகம்

Lankathas Pathmanathan

கனடாவின் முதல் சுதேச ஆளுநர் நாயகம் நியமனம்

Gaya Raja

Leave a Comment