தேசியம்
செய்திகள்

கனடாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்

கனடாவும் தென் கொரியாவும் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

கடந்த October மாதம் முடிவடைந்த பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், இரு நாடுகளும் புதன்கிழமை (25) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இரகசிய இராணுவ, பாதுகாப்பு தகவல்கள் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தமாக இந்த ஒப்பந்தம் அமைகிறது.

இது எமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு முக்கியமான ஒப்பந்தமாகும் என கனடிய பாதுகாப்பு அமைச்சர் David McGuinty தெரிவித்தார்.

கனடிய பாதுகாப்பு அமைச்சர் David McGuinty, வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்தித்தனர்.

இந்த சந்திபில், தற்போதைய புவிசார் அரசியல் யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் தங்கள் மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

“பெரும் சக்தி” பொருளாதார வற்புறுத்தலை எதிர்கொள்ள நடுத்தர சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் Mark Carney வலியுறுத்திய சுமார் ஒரு மாதத்திற்கு பின்னர் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.

பாதுகாப்பு கொள்முதல், தொழில்துறை பாதுகாப்பு முதல் ஆராய்ச்சி வரை அனைத்திலும் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் ஒரு சட்டப்பூர்வ அடிப்படையாக இருக்கும் என கனடிய அரசாங்கம் October மாதம் கூறியது குறிப்பிடத்தக்கது.

முக்கியமான கனிமங்களில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான ஒப்பந்தத்தில் ஜெர்மனுடன் கடந்த திங்கட்கிழமை (23) கனடாவின் தொழில்துறை அமைச்சர் Melanie Joly கைச்சாத்திட்டிருந்தார்.

Related posts

Winnipeg நகர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி மரணம்

Lankathas Pathmanathan

அமெரிக்க வரிகளை தவிர்ப்பது குறித்த உத்தரவாதம் எதுவும் வழங்கப்படவில்லை?

Lankathas Pathmanathan

முதியவர்களை குறிவைக்கும் பண மோசடியில் தமிழர் கைது

Leave a Comment