எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் Pierre Poilievre தனது முதலாவது சர்வதேச பயணத்தை மேற்கொள்கிறார்.
அடுத்த வார ஆரம்பத்தில் Conservative கட்சித் தலைவர் இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பயணிக்கிறார்.
Pierre Poilievre அலுவலகத்தின் ஒரு மூத்த அதிகாரி புதன்கிழமை (25) இந்தப் பயணத்தை உறுதிப்படுத்தினார்.
அவரது பயண திட்டம் குறித்த விபரங்கள் முழுமையாக வெளியிடப்படாத போதிலும், இதுவரை பெயர் குறிப்பிடப்படாத ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளைச் சந்திப்பதோடு பல உரைகளை Pierre Poilievre வழங்க உள்ளதாகவும் தெரியவருகிறது.
அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக Pierre Poilievre மேற்கொள்ளும் முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணமாக இது அமைகிறது.
பிரதமர் Mark Carney மூன்று நாடுகளுக்கான 9 நாள் பயணத்தை ஆரம்பிக்கும் நிலையில் இந்தப் பயணம் முன்னெடுக்கப்படுகிறது.
ஒரு எதிர்க்கட்சித் தலைவர் வெளிநாடு செல்வது அரிதானது – ஆனால் இதற்கு முன்னர் நடைபெறாத நிகழ்வு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
2018-ஆம் ஆண்டில், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த Andrew Scheer இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
எந்த ஒரு கனடிய பிரதமரையும் போலவே, Mark Carney-யும் கனடிய வரி செலுத்துவோரின் செலவில் பயணம் செய்வது வழக்கமாகும்.
ஆனாலும் Pierre Poilievre-ரின் பயணத்திற்கு வரி செலுத்துவோர் பணம் செலவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Conservative கட்சிக்கு நன்கொடைகள் மூலம் செலுத்தப்படும் பணத்தில் Pierre Poilievre-ரும் அவரது அலுவலக ஊழியர்களும் பயணிப்பார்கள் எனத் தெரியவருகிறது.
