September 27, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவுடன் எந்த ஒரு வர்த்தக ஒப்பந்தத்திலும் வரிகள் அடங்கும்: அமெரிக்க வர்த்தக பிரதிநிதி

கனடாவுடன் எந்த ஒரு வர்த்தக ஒப்பந்தத்திலும் வரிகள் அடங்கும் என அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தக பிரதிநிதி தெரிவித்தார்.

மீள் பேச்சுவார்த்தைக்கு உள்ளாகியுள்ள CUSMA ஒப்பந்தத்திலும் வரி கட்டணங்கள் அடங்கும் எனவும் அமெரிக்க வர்த்தக வர்த்தக பிரதிநிதி Jamieson Greer கூறினார்.

கனடா-அமெரிக்கா-Mexico வர்த்தக ஒப்பந்தத்தை (CUSMA) புதுப்பித்தல் உட்பட, அமெரிக்க நிர்வாகத்துடன் எந்தவொரு ஒப்பந்தத்திலும் வரி கட்டணங்கள் ஒரு பகுதியாக இருக்கும் என்பதை கனடா ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Donald Trump செவ்வாய்க்கிழமை (24) இரவு ஆற்றிய state of the union உரைக்குப் பின்னர் வழங்கிய செவ்வியில், கனடா வரிகள் இல்லாத வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்பார்க்க முடியாது எனவும் Jamieson Greer தெரிவித்தார்.

இந்த ஆண்டு CUSMA மறு ஆய்வுக்கு வர உள்ளது.

 Donald Trump நிர்வாகம் ஏற்கனவே கனடிய ஏற்றுமதிகள் மீது வரிகளை விதித்துள்ளது.

மூன்று நாடுகளும் July 1-ஆம் திகதிக்குள் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புகிறதா, அதன் விதிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறதா, அல்லது அதை காலாவதியாக விட விரும்புகிறதா என்பதைக் குறிப்பிட வேண்டும்.

இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து கனடாவும் அமெரிக்காவும் இதுவரை முறையான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவில்லை.

சில வாரங்களுக்குள் இந்த பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கும் என பிரதமர் Mark Carney அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

Donald Trump ஒரு “சர்வாதிகாரி”: Doug Ford

Lankathas Pathmanathan

Ontarioவில் எட்டாவது நாளாகவும் 1,500க்கும் அதிகமான தொற்றுக்கள்

Gaya Raja

தமிழர் பிரதிநிதித்துப்படுத்தும் தொகுதியில் களமிறங்கும் பிரதான போட்டியாளர்?

Lankathas Pathmanathan

Leave a Comment