தேசியம்
செய்திகள்

கனடாவுக்கு வருகை தரும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை குறைகிறது?

முந்தைய ஆண்டை விட 2025 December-ரில் கனடாவுக்கு வருகை தந்த அமெரிக்க பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்தது.

கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் திங்கட்கிழமை (23) வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளியானது.

இதே காலகட்டத்திற்கான வெளிநாட்டு பயணிகளின் கனடிய வருகை அதிகரித்திருந்ததாகவும் புதிய புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

கனடாவுக்கான அமெரிக்க குடியிருப்பாளர் பயணம் ஒரு வருடத்திற்கு முந்தைய இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 7.5 சதவீதம் குறைந்து, மொத்தம் 1.6 மில்லியன் வருகைகள் என பதிவாகியுள்ளது.

இதற்கு நேர்மாறாக, 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​அதே நேரத்தில் கனடாவிற்கு வெளிநாட்டுப் பயணிகளின் வருகை 14.1 சதவீதம் – அல்லது 509,500 பேர் – அதிகரித்துள்ளது.

தேவேளை கனடியர்கள் பயணத்தைப் பொறுத்தவரை, வெளிநாட்டுப் பயணங்கள் ஒரு வருடத்திற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் குறைந்து, மொத்தம் 3.5 மில்லியன் பயணங்களாக பதிவாகியுள்ளது.

Related posts

உலகளாவிய சிறுவர் பாலியல் துஷ்பிரயோக விசாரணையில் கனடியர்கள் கைது

Lankathas Pathmanathan

உக்ரைன் குறித்து கலந்துரையாட அமெரிக்க பயணமான கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan

March மாதம் 18ஆந் திகதி அறிவிக்கப்பட்ட கனடிய அரசின் COVID-19 பொருளாதார நடவடிக்கைத் திட்டத்தின் சாராம்சம் | (English version below)

thesiyam

Leave a Comment