தேசியம்
செய்திகள்

25 சதவீதம் உயர்ந்தது கனடாவின் வீட்டின் விலை – அதிக விலை அதிகரிப்பை கொண்ட பகுதி என்ன தெரியுமா?

COVID தொற்றின் மத்தியில் கனடாவின் சராசரி வீட்டின் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது என தரவுகள் சுட்டிக் காட்டுகிறது

CREA எனப்படும் கனடிய Real Estate  சங்கம்  வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. February மாதம் 2020ஆம் ஆண்டுடன் February மாதம் 2021ஆம் ஆண்டுக்கான சராசரி வீட்டின் விலைகளை ஒப்பிடும்போது, 25 சதவீதம் அதிகரிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கனடாவில் வீடொன்றின் சராசரி விலை இந்த ஒரு வருட காலத்தில் 5 இலட்சத்து 42 ஆயிரத்து 484 டொலரில் இருந்து 6 இலட்சத்து 78 ஆயிரத்து 91 டொலராக உயர்ந்துள்ளது. இவற்றில் மிகப்பெரிய விலை அதிகரிப்புகள் Northwest Territories (48.1%), Nova Scotia (30.4%), Ontario (24.5%), Quebec (22.5%), New Brunswick (20.9%) ஆகிய பிராந்தியங்களிலும் மாகாணங்களிலும் பதிவாகியுள்ளன. 

Related posts

கடந்த காலாண்டில் கனேடிய பொருளாதாரத்தில் வளர்ச்சி இல்லை

Lankathas Pathmanathan

தொற்றுக்கான சுய கண்காணிப்பில் பிரதமர்!

Lankathas Pathmanathan

கனடிய அரசாங்கத்தின் புதிய துப்பாக்கி சட்டமூலம்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!