தேசியம்
செய்திகள்

மூன்றாவது அலையை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை:பிரதமர் Trudeau

COVID தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க கனடாவின் பல பகுதிகளில் கடுமையான நடவடிக்கைகள் தேவை என பிரதமர் Justin Trudeau கூறினார். மத்திய அரசு இதுவரை மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் 10.5 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி அளவுகளை விநியோகித்துள்ளதாக Trudeau நேற்று வெள்ளிக்கிழமை கூறினார். June மாத இறுதிக்குள், Pfizer, Moderna, AstraZeneca ஆகிய நிறுவனங்களிடமிருந்து குறைந்தது 44 மில்லியன் தடுப்பூசி அளவுகளைப் பெற கனடா எதிர்பார்க்கிறது எனவும் Trudeau தெரிவித்தார்.

இந்த நிலையில் கனடாவின் பல பகுதிகளில் தொற்றின் புதிய திரிபுகள் வலுவான அதிகரிப்பை தொடர்ந்தும் உருவாக்கும் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam கூறினார்.

புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் கடந்த வாரத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ள COVID தொற்றாளர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத வகையில் மிக அதிகமான எண்ணிக்கையை எட்டியுள்ளதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

Related posts

பாவனைக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு தடுப்பூசியும் பாதுகாப்பானது: பிரதமர்

Gaya Raja

விபத்தில் பயணி உயிரிழந்ததை அடுத்து தமிழரான சாரதி மீது குற்றச்சாட்டு பதிவு

கனடிய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை உயர்த்தியது

Leave a Comment