தேசியம்
செய்திகள்

கனடாவுக்கு வருகை தரும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை குறைகிறது?

முந்தைய ஆண்டை விட 2025 December-ரில் கனடாவுக்கு வருகை தந்த அமெரிக்க பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்தது.

கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் திங்கட்கிழமை (23) வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளியானது.

இதே காலகட்டத்திற்கான வெளிநாட்டு பயணிகளின் கனடிய வருகை அதிகரித்திருந்ததாகவும் புதிய புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

கனடாவுக்கான அமெரிக்க குடியிருப்பாளர் பயணம் ஒரு வருடத்திற்கு முந்தைய இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 7.5 சதவீதம் குறைந்து, மொத்தம் 1.6 மில்லியன் வருகைகள் என பதிவாகியுள்ளது.

இதற்கு நேர்மாறாக, 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​அதே நேரத்தில் கனடாவிற்கு வெளிநாட்டுப் பயணிகளின் வருகை 14.1 சதவீதம் – அல்லது 509,500 பேர் – அதிகரித்துள்ளது.

அதேவேளை கனடியர்கள் பயணத்தைப் பொறுத்தவரை, வெளிநாட்டுப் பயணங்கள் ஒரு வருடத்திற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் குறைந்து, மொத்தம் 3.5 மில்லியன் பயணங்களாக பதிவாகியுள்ளது.

Related posts

வானிலை எச்சரிக்கைகளுக்கு புதிய வண்ணக் குறியீட்டு முறை அறிமுகம்!

Lankathas Pathmanathan

Torontoவுக்கான பனிப் பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Lankathas Pathmanathan

நெடுஞ்சாலை 401 விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment