September 15, 2026
தேசியம்
செய்திகள்

Tumbler Ridge சமூகத்திற்கு மத்திய அரசாங்கம் அனைத்து வகையிலும் உதவ தயார்: ஹரி ஆனந்தசங்கரி

Tumbler Ridge சமூகத்திற்கு மத்திய அரசாங்கம் அனைத்து வகையிலும் உதவ தயாராக உள்ளது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

British Colombia மாகாணத்தின் Tumbler Ridge பாடசாலை துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர் – மேலும் 27 பேர் காயமடைந்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட Tumbler Ridge சமூகத்தை ஆதரிப்பதற்காக அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒன்றிணைந்து செயல்படுவதாக அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கூறினார்.

அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள அரசியல்வாதிகள் கட்சிப் பிரிவுகளைத் தாண்டி புதன்கிழமை (11) இரவு Tumbler Ridge மாவட்ட நகராட்சியில் ஒன்றிணைந்தனர்.

மாகாண முதல்வர் David Eby, மத்திய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, மாகாண பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் Nina Krieger, B. C. சட்டமன்ற சபாநாயகர் Raj Chouhan, Tumbler Ridge நகர முதல்வர் Darryl Krakowka உள்ளிட்ட பலர் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நடந்த இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் Mark Carney விரைவில் Tumbler Ridge பயணிப்பார் என அவரது அலுவலகம் அறிவித்தது.

கனடிய நாடாளுமன்றில் வழமையான அமர்வுகள் புதன்கிழமை இரத்து செய்யப்பட்ட நிலையில், சிறப்பு அமர்வில் கட்சித் தலைவர்கள் துப்பாக்கிச் சூடு குறித்து உணர்ச்சிபூர்வமான உரைகளை வழங்கினர்,

இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், British Colombia மாகாண அரசாங்கம் வியாழக்கிழமை (12) மாகாணம் முழுவதும் துக்க நாளை அறிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்:

B.C. துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் இரங்கல்! – தேசியம்

B.C. மாகாண பாடசாலை துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி: RCMP – தேசியம்

Related posts

சீன மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க வேண்டும்: Ontario முதல்வர் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Scarborough Southwest தொகுதி Ontario Liberal வேட்பாளர் தெரிவு

Lankathas Pathmanathan

Quebec சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கியூபாவில் விபத்து- ஒருவர் மரணம் – 26 பேர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment