தேசியம்
செய்திகள்

கரி ஆனந்தசங்கரிக்கு மற்றுமொரு அமைச்சர் பதவி

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரிக்கு Justin Trudeau அரசின் அமைச்சரவையில் மற்றுமொரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட Justin Trudeau அரசின் முழு அமைச்சரவை மாற்றம் வெள்ளிக்கிழமை (20) அறிவிக்கப்பட்டது.

இந்த அமைச்சரவை மாற்றத்தில்  கரி ஆனந்தசங்கரி, வடக்கு விவகாரங்கள் கனடிய வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் – Northern Affairs and Canadian Northern Economic Development Agency அமைச்சை பொறுப்பேற்றார்.

Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தொடர்ந்தும் முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சராக – Crown-Indigenous Relations Minister – தொடர்ந்து பதவி வகிக்கிறார்.

ஆளுநர் நாயகத்தின் தலைமையில் வெள்ளி காலை நடந்த புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வில் கரி ஆனந்தசங்கரி திருக்குறளின் மீது சத்தியம் செய்து தனது புதிய அமைச்சர் பதவியை ஏற்று கொண்டார்.

இந்த அமைச்சரவை மாற்றத்தில் 4 அமைச்சர்களுக்கு புதிய இலாகாக்களை பிரதமர் மீண்டும் நியமித்தார்.

8 Liberal நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

Related posts

March இறுதிவரை விடுமுறை எடுக்கும் Ontario அரசு?

Lankathas Pathmanathan

Montreal: கத்திக் குத்தில் மூவர் மரணம்

Lankathas Pathmanathan

ஒரு தேசமாக அணிதிரளக் கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம்!

Lankathas Pathmanathan

Leave a Comment