தேசியம்
செய்திகள்

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்ற Toronto Maple Leafs

Stanley Cup Playoffs தொடரின் இரண்டாவது சுற்றுக்கு Toronto Maple Leafs அணி தகுதி பெற்றுள்ளது.

சனிக்கிழமை (29) நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், Stanley Cup Playoffs தொடரில் இரண்டாவது சுற்றுக்கு Maple Leafs அணி தகுதி பெற்றுள்ளது.

முதலாவது சுற்றில் Atlantic பிரிவில் Toronto Maple Leafs அணி Tampa Bay Lightning அணியை எதிர்கொண்டது.

மொத்தம் ஏழு ஆட்டங்கள் கொண்ட முதல் சுற்றில் நான்கு ஆட்டங்களில் Maple Leafs அணி வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Toronto Maple Leafs, Edmonton Oilers, Winnipeg Jets ஆகிய மூன்று கனடிய அணிகள் இம்முறை Stanley Cup Playoffs தொடருக்கு தகுதி பெற்றன

இவற்றில் Winnipeg Jets அணி ஏற்கனவே Stanley Cup தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

Related posts

Scarborough மருத்துவமனை அறக்கட்டளைக்கு 250,000 சேகரித்த கனடிய தமிழர்கள்

Gaya Raja

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் ஆரம்பம்

Lankathas Pathmanathan

$300 மில்லியன் Fiano மீட்பு நிதி அறிவித்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment