தேசியம்
செய்திகள்

Conservative கட்சியின் கொள்கை மாநாடு ஆரம்பம்!

Conservative கட்சியின் கொள்கை மாநாடு Quebec நகரில் ஆரம்பமானது.

இந்த மூன்று நாள் மாநாடு வியாழக்கிழமை (07) ஆரம்பமானது.

பிரதமர் Justin Trudeauவுக்கு எதிரான செய்திகளுடன் உள்ளடக்கிய உரையுடன் Conservative கட்சி தலைவர் Pierre Poilievre இந்த மாநாட்டை ஆரம்பித்தார்.

எட்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் Trudeau அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுக்குக் காரணம் என
Poilievre தனது உரையில் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் பங்கேற்பவர்கள் மத்தியில் அடுத்த சில நாட்களில் பல்வேறு பேச்சாளர்கள் உரையாற்றவுள்ளனர்.

முன்னாள் Conservative அமைச்சர் Peter MacKay வெள்ளிக்கிழமை (08) இந்த மாநாட்டில் உரையாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

Markham நகரசபையின் 7-ஆம் வட்டார இடைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்!

Lankathas Pathmanathan

இளவரசர் Harry – Ontario முதல்வர் சந்திப்பு

Lankathas Pathmanathan

Ontario அரசின் பாடசாலைக்குத் திரும்பும் திட்டம் வெளியானது!

Gaya Raja

Leave a Comment