தேசியம்
செய்திகள்

வட்டி விகிதங்களை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை தோன்றலாம்?

கனடிய மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதங்களை அதிகரிக்க வேண்டிய நிலை தோன்றலாம் என தெரிவிக்கப்படுகிறது.

கனடிய மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

Calgary வர்த்தக சபையில் அவர் வியாழக்கிழமை உரை ஆற்றினார்.

பணவீக்கம் சில காலம் அதிகமாக இருக்கும் என்ற நிலையில் மீண்டும் வட்டி விகிதங்களை அதிகரிக்க வேண்டிய நிலை தோன்றலாம் என அவர் தனது உரையில் கூறினார்.

வட்டி விகிதத்தில் மாற்றம் எதையும் மேற்கொள்ளப்போவதில்லை என மத்திய வங்கி புதன்கிழமை (06) அறிவித்திருந்தது.

இதன் மூலம் வட்டி விகிதத்தை 5 சதவீதத்தில் நிலையாக வைத்திருக்க கனடிய மத்திய வங்கி முடிவு செய்துள்ளது

இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் சுருங்கியுள்ளதாக கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் கடந்த வாரம் தெரிவித்தது.

வேலையற்றோர் விகிதம் தொடர்ந்து மூன்று மாதங்களாக அதிகரித்து வருகிறது.

கனடாவின் பணவீக்க விகிதம் July மாதத்தில் 3.3 சதவீதமாக இருந்தது.

ஆனாலும் பணவீக்கம் வரவிருக்கும் மாதங்களில் அதிகரித்து மீண்டும் குறையும் என மத்திய வங்கி  எதிர்பார்க்கிறது.

Related posts

Quebecகில் காட்டுத் தீ 10 ஆயிரம் hectares பரப்பரவை பாதித்தது

Lankathas Pathmanathan

புதிய ஆண்டில் COVID தொற்றின் அதிகரிப்பை எதிர் கொள்ளலாம்!

Lankathas Pathmanathan

B.C. உலங்குவானுர்தி விபத்தில் இருவர் பலி – நால்வர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment