தேசியம்
செய்திகள்

Toronto நகர சபை இடைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த தமிழர்!

Toronto நகர சபையில் வெற்றிடமாக உள்ள Scarborough Southwest தொகுதி இடைத் தேர்தலில் தமிழர் ஒருவர் போட்டியிடுகின்றார்.

Scarborough Southwest தொகுதிக்கான இடைத்தேர்தல் போட்டியிடும் வேட்புமனுவை தமிழரான பார்த்தி கந்தவேள் வியாழக்கிழமை (07) தாக்கல் செய்தார்.

பார்த்தி கந்தவேள், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த தொகுதியில் கல்வி சபை உறுப்பினராக வெற்றி பெற்றவராவார்.

இவர் கடந்த நகரசபை தேர்தலில் Scarborough Southwest தொகுதியின் நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Scarborough Southwest தொகுதி நகரசபை உறுப்பினர் இருக்கை வெற்றிடமாக உள்ளதாக அறிவிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக நகரசபை உறுப்பினர்கள் கடந்த மாதம் 10ஆம் திகதி வாக்களித்தனர்

இந்த இடை தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்படவில்லை.

Scarborough Southwest தொகுதிக்கான நகரசபை உறுப்பினர் இருக்கை July 26ஆம் திகதி முதல் வெற்றிடமானது.

இந்த தொகுதியில் நீண்ட கால நகர சபை உறுப்பினராக இருந்த Gary Crawford தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்தார்.

Scarborough-Guildwood தொகுதியில் நடைபெற்ற மாகாண சபை இடைத் தேர்தலில் Progressive Conservative கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு Gary Crawford தனது பதவியில் இருந்து விலகியிருந்தார்

இந்த இடைத் தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஞாயிறு நடைமுறைக்கு வரும் இலையுதிர் கால நேர மாற்றம்

Lankathas Pathmanathan

Quebec அதிகாரப்பூர்வமற்ற எல்லை கடவையை மூடும் பணி: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Quebec இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: Avi Lewis

Lankathas Pathmanathan

Leave a Comment