தேசியம்
செய்திகள்

எதிர்வரும் புதன்கிழமை Manitoba மாகாண முதல்வர் பதவி விலகுகிறார்!

எதிர்வரும் புதன்கிழமை Manitoba மாகாண முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக Brian Pallister கூறுகிறார்.

முதல்வர் Pallister புதன்கிழமை அலுவலகத்தை விட்டு வெளியேறவும்,  Manitobaவின் Progressive Conservative கட்சி ஒரு ஒரு இடைக்கால தலைவரை தேர்வு செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

இந்த மாத ஆரம்பத்தில் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்த Pallister, Progressive Conservative கட்சி தலைமை தெரிவான October 30ஆம் திகதிக்கு முன்பே பதவியை விட்டு வெளியேற முடிவு செய்ததாக கூறினார்.

இதற்கான காரணங்களின் ஒன்று, புதிய தலைமைக்கான போட்டியில் கட்சி பிளவுபடாமல் இருப்பதை உறுதி செய்வது  எனவும் அவர் கூறுகிறார்.

இதுவரை, முன்னாள் சுகாதார அமைச்சர் Heather Stefanson, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் Shelly Glover, மாகாண சபை உறுப்பினர் Shannon Martin ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

Related posts

பயங்கரவாத சந்தேக நபர் மாணவராக கனடாவிற்குள் நுழைந்தார்?

Lankathas Pathmanathan

Toronto Raptors அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்

Lankathas Pathmanathan

Atlantic கனடாவில் வலுவான உள்கட்டமைப்பின் தேவையை வலியுறுத்திய பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment