சுகாதார பராமரிப்பாளர்களுக்கும் கல்வி தொழிலாளர்களுக்கும் கட்டாய தடுப்பூசிகளை வழங்குவது குறித்து Ontario முதல்வர் தனது அமைச்சரவையுடன் கலந்துரையாடவுள்ளார்.
திங்கட்கிழமை இரவு இந்த இந்த அமைச்சரவை சந்திப்பு நடைபெற ஏற்பாடாகியுள்ளது . இந்த சந்திப்பில் சுகாதார பணியாளர்களும் கல்வித் தொழிலாளர்களும் முழுமையாக தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்குவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
முன்னணி தொழிலாளர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்குவது குறித்த கேள்விகளை Doug Ford அரசாங்கம் முன்னர் ஒதுக்கி வந்தது. ஆனால் தொற்றின் நான்காவது அலைக்கு மத்தியில் சமீபத்திய வாரங்களில் இந்த விடயம் குறித்த அதிக அழுத்தத்தை அவர்கள் எதிர்கொண்டனர்.
மாகாணத்தின் முதன்மை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் Kieran Moore, இந்த கட்டாய தடுப்பூசி கொள்கையை வலியுறுத்தி வருவதாக தெரியவருகிறது.