தேசியம்
செய்திகள்

நாடாளுமன்றத்திற்கு 52 புதிய உறுப்பினர்கள் தேர்வு!

கடந்த பொதுத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை நாடாளுமன்ற நோக்குநிலை திட்டத்தின்  ஆரம்ப  கூட்டத்தில்  பங்கேற்றனர்.

நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 52 புதிய உறுப்பினர்களில்  10 பேர் திங்களன்று நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் .

இவர்களுக்கான நோக்குநிலை அமர்வுகள் செவ்வாக்கிழமையும் தொடரவுள்ளது.

நடைபெற்ற பொதுத் தேர்தலில் 286 உறுப்பினர்கள் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகினர்.

நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கும் திகதி இதுவரை பிரதமர் Justin Trudeauவினால் அறிவிக்கப்படவில்லை.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தலில்  Liberal 159, Conservative 119, Bloc Québécois 33, NDP 25, Green 2 என இம்முறை ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது.

ஆனாலும் தேர்தல் முடிவுகளை இதுவரை தேர்தல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Saskatchewan First Nation பயணமாகும் பிரதமர்!

Gaya Raja

கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறக்கூடாது என்ற நிலைப்பாட்டில் Wayne Gretzky உள்ளார்?

Lankathas Pathmanathan

இந்தியாவிலிருந்து வரும் நேரடி விமான சேவை தடை நீட்டிக்கப்படுகிறது

Gaya Raja

Leave a Comment