September 29, 2026
தேசியம்
செய்திகள்

“போரின் சாட்சியம்” நூலின் முதல் பிரதி கனடிய அமைச்சரிடம் கையளிப்பு!

“போரின் சாட்சியம்” என்ற நூலின் முதல் பிரதி கனடாவின் முடியரசு-பழங்குடிகள் உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் வழங்கப்பட்டது.

இலங்கைத்தீவின் இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தினர் எவ்வாறு இனப்படுகொலை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களின் நேரடிச் சாட்சியங்களில் ஒருவரான சுரேன் கார்த்திகேசு இந்த நூலை தொகுத்துள்ளார்.

தற்போது British Colombia மாகாணத்தின் Vancouverரில் வசித்து வரும் இவர் ஈழ நாதம் பத்திரிகையில் செய்தியாளராக இறுதி வரை கடமையாற்றியவர்.

ஞாயிற்றுக்கிழமை (21) Vancouver நகரில் பிரத்தியேகமாக நடைபெற்ற நிகழ்வில் “போரின் சாட்சியம்” நூலின் முதல் பிரதியை அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி பெற்றுக் கொண்டார்.

2010ஆம் ஆண்டு MV Sun Sea கப்பல் மூலம் கனடா வந்தடைந்த அகதிகளில் ஒருவரான சுரேன் கார்த்திகேசு 2009 ஆம் ஆண்டு May மாதம் 17ஆம் திகதி வரை முள்ளிவாய்க்காலில் வாழ்ந்தவர்.

முள்ளிவாய்க்கால் யுத்த மீறல் குற்றமாக சுட்டிக் காட்டப்படும் cluster குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதற்கான நேரடி சாட்சியம் இவராவார்.

இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வு British Colombia மாகாணத்தில் April 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தொடர்ந்து பல்வேறு மாகாணங்களில் இந்த நூல் வெளியீடு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

Related posts

கனடாவுக்கு வரும் பயணிகளில் தனிமைப்படுத்தலை மறுத்தவர்களுக்கு அபராதம்!

Gaya Raja

Ontario மாகாண முன்னாள் ஆளுநருக்கு அரசமுறை இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan

புதிய காட்டுத்தீகள் உருவாகி வேகமாக பரவக்கூடிய சாத்தியக்கூறு?

Lankathas Pathmanathan

Leave a Comment