தேசியம்
செய்திகள்

கனடிய வெளியுறவுத் துறையின் பிரதான பதவிக்கு தமிழர் நியமனம்

கனடிய அரசாங்கத்தின் வெளியுறவுத் துறையின் பிரதான பதவிக்கு தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடிய அரசாங்கத்தின் பொது சேவையின் வெளியுறவுத் துறையில் அருண் தங்கராஜ் என்ற தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் Mark Carney இந்த நியமனத்தை புதன்கிழமை அறிவித்தார்

போக்குவரத்து துறை அமைச்சின் பொது சேவை பதவியில் இருந்த அருண் தங்கராஜ் புதிய வெளியுறவுத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் Mark Carney பொது சேவையின் மூத்த பதவிகளில் மாற்றங்களை அறிவித்தார்.

இந்த நியமனத்தின் மூலம் கனடாவின் வெளியுறவுத் துறையின் பிரதான இரண்டு பதவிகளை தமிழர்கள் தம்வசம் கொண்டுள்ளனர்.

கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக தமிழரான அனிதா ஆனந்த் பதவி வகிக்கிறார்.

அருண் தங்கராஜ் 25 ஆண்டுகள் வரை கனடிய மத்திய அரசில் கடமையாற்றிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

எரிபொருளின் விலை தொடர்ந்து உயரும்!

Lankathas Pathmanathan

COVID பொது சுகாதார உத்தரவுகளை மீறிய அபராதத்தை எதிர்கொள்ளும் Maxime Bernier

Lankathas Pathmanathan

Sweden அணியை வெற்றி கொண்டது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment