February 13, 2025
தேசியம்
செய்திகள்

கனடாவில் இன்று ஐந்தாயிரம் தொற்றுக்கள் பதிவு!

கனடாவில் இன்று (21) ஐந்தாயிரம் COVID தொற்றுக்கள் பதிவானது.

கனடாவின் நான்கு மாகாணங்கள் இன்று அதிகூடிய  அளவிலான நாளாந்த தொற்றுகளைப் பதிவு செய்தன. New Brunswick, Ontario, Saskatchewan மற்றும் Alberta மாகாணங்களின் சுகாதார அதிகாரிகள் புதிய ஒற்றை நாள் அதிகரிப்பை இன்று அறிவித்தனர். New Brunswickகில் 23, Ontarioவில் 1,588 , Saskatchewanனில் 439 மற்றும் Alberta 1,336 என தொற்றுகள் பதிவாகின

இன்று 72 மரணங்களுக்கு சுகாதார அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் கனடாவின் மொத்த தொற்றின் எண்ணிக்கை 325,711 எனவும் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11,406 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 நாட்களில் தொற்றுக்களின் எண்ணிக்கை 36 சதவீதமும், மரணங்களின் எண்ணிக்கை 49 சதவீதமும் அதிகரித்துள்ளன.

Related posts

Manitobaவில் எல்லை முற்றுகை அகற்றப்படும்: RCMP நம்பிக்கை

Lankathas Pathmanathan

இந்த வாரம் 2.9 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன!

Gaya Raja

மத்திய வரவு செலவு திட்டம் நிறைவேறியது!

Lankathas Pathmanathan

Leave a Comment