September 29, 2026
தேசியம்
செய்திகள்

சரக்கு புகையிரத வண்டி தீப்பிடித்தது

சரக்கு புகையிரத வண்டி ஒன்று தீப்பிடித்த சம்பவம் Ontario மாகாணத்தின் London நகரில் நிகழ்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை (21) இரவு 11 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த சரக்கு புகையிரத வண்டி தீப்பிடித்தது.

பழைய புகையிரத மர இணைப்புகளை ஏற்றிச் சென்ற ஐந்து புகையிரத பெட்டிகள் தீப்பிடித்து எரிந்துள்ளது என London தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த புகையிரதத்தில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இருக்கவில்லை என தெரியவருகிறது.

புகை மூட்ட முன்னெச்சரிக்கை காரணமாக இந்த புகையிரதம் தீப்பிடித்த பகுதியில் வசிப்பவர்கள் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இதனால் ஏற்பட்ட சேதம் 35,000 டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கனேடிய அமெரிக்க எல்லை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்

Gaya Raja

Liberals, NDP கட்சிகளுக்குள் ஒரு தற்காலிக ஒப்பந்தம்

கனடாவில் போதுமான குழந்தைகள் தடுப்பூசியை பெறவில்லை: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment