தேசியம்
செய்திகள்

கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் 4.75 சதவீதமாக உயர்வு

கனடிய மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது.

இதன் மூலம் வட்டி விகிதம் 4.75 சதவீதமாக உயர்கிறது.

வட்டி விகித அதிகரிப்பு முடிவை கனடிய மத்திய வங்கி புதன்கிழமை (07) காலை அறிவித்தது.

January மாதத்தின் பின்னரான முதலாவது வட்டி விகித உயர்வு இதுவாகும்.

இதன் மூலம் முக்கிய வட்டி விகிதத்தை மத்திய வங்கி 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்த்தியுள்ளது.

வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான மத்திய வங்கியின் முடிவிற்கு பல காரணிகள் வழிவகுத்தன,

இதில் கனடாவில் பொருளாதார வளர்ச்சியும் ஒன்றாகும்.

கனடிய மத்திய வங்கியின் அடுத்த திட்டமிடப்பட்ட வட்டி விகித அறிவிப்பு July மாதம் 12ஆம் திகதி எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

அரசாங்கத்துடன் NDP ஒப்பந்தம் முடிவுக்கு வராது: NDP தலைவர்

Lankathas Pathmanathan

Ontario மாகாண முன்னாள் ஆளுநர் முன்மாதிரியான குடும்ப தலைவராக நினைவு கூறப்பட்டார்!

Lankathas Pathmanathan

அவசர சிகிச்சை பிரிவுகளில் உதவி கோரும் Ontario!

Gaya Raja

Leave a Comment