தேசியம்
செய்திகள்

Ontario COVID கட்டுப்பாடுகளை விரைவில் நீக்கவில்லை: முதல்வர் Ford

Ontario மாகாணம் COVID கட்டுப்பாடுகளை விரைவில் நீக்கவில்லை என முதல்வர் Doug Ford தெரிவித்தார்.
மருத்துவமனைகளில் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அண்மையில் அதிகரிப்பதாக  அறிகுறிகள் வெளியாகியுள்ளன.

இருந்தபோதிலும், மாகாணம் கட்டுப்பாடுகளை மிக விரைவில் நீக்கியதாக தான் நம்பவில்லை என முதல்வர் வெள்ளிக்கிழமை (25) கூறினார்

வட அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் கடைசியாக நீக்கிய மாகணங்களில் Ontarioவும் ஒன்று என Ford குறிப்பிட்டார்.
முந்தைய அலைகளில் இருந்ததைப் போல தொற்றின் எண்ணிக்கை அதிகரித்தால், அரசாங்கம் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டியதில்லை என Ford பரிந்துரைத்தார்.
Ontario அரசாங்கம் கடந்த திங்கட்கிழமை பெரும்பாலான இடங்களில் முகமூடி  கட்டுப்பாடுகளை நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

வெள்ளிக்கிழமை எரிபொருளின் விலை மூன்று சதம் சரியும்

Lankathas Pathmanathan

நான்கு வருடங்களில் வரவு செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்த Ontario Liberal கட்சி உறுதி

Lankathas Pathmanathan

கனடிய அரசின் உயரிய விருது பெறும் தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment