தேசியம்
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டம் உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது

தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டம் Ontario உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Ontario தமிழ் இனப்படுகொலையை அது தொடர்பான கல்வி முயற்சிகள் தொடர்பான சட்டம் இயற்றும் நோக்கங்களுக்காக அல்லது அதை நினைவுகூருவதற்காக அங்கீகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என செவ்வாய்க்கிழமை (28) நீதிபதி Jasmine Akbarali தனது முடிவில் தெரிவித்தார்.

Ontario மாகாணத்தின் பிரகடனத்தின் மீது சிங்கள கனேடிய குழுக்களின் அரசியலமைப்பு சவாலை நீதிமன்றம் நிராகரித்தது.

இது உலகப் போர்கள் அல்லது வேறு ஏதேனும் சர்வதேச மோதலின் சர்வதேச அம்சங்களை மையமாகக் கொண்ட மாகாணக் கல்வி கொள்கையிலிருந்து வேறுபட்டதல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் May 11 முதல் 18 வரை தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் கடைப்பிடிக்கப்படுவதை அறிவிக்கும் 104 சட்டமூலத்தை PC கட்சியின் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் கடந்த ஆண்டு சமர்ப்பித்தார்.

Ontario சட்டமன்றத்தின் அனைத்து கட்சிகளும் இந்த தனியார் மசோதா ஏகமனதாக ஆதரித்த நிலையில் நிறைவேற்றப்பட்டது.

Related posts

November மாதத்தில் மாத்திரம் கனடாவில் 140,000 தொற்றுக்கள் பதிவு!

Lankathas Pathmanathan

உக்ரேனிய படைகளுடன் போரில் ஈடுபட்ட கனடியர் மரணம்

Lankathas Pathmanathan

மக்கள் கருத்துக்கணிப்பில் முன்னிலையில் உள்ள PC

Lankathas Pathmanathan

Leave a Comment