தேசியம்
செய்திகள்

கனடா மீதான Donald Trump வரிகளுக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்தது!

கனடா மீதான அமெரிக்க ஜனாதிபதியின் வரிகளுக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்தது.

ஜனாதிபதியின் ‘fentanyl அவசரநிலை’ கட்டணங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானத்தில் ஆறு குடியரசுக் கட்சியினர் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து புதன்கிழமை (11) வாக்களித்தனர்.

கனடிய பொருட்கள் மீதான ஜனாதிபதி Donald Trump-பின் வரிகளுக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

இது கனடா மீது வர்த்தகப் போரை ஆரம்பிப்பதற்காக Donald Trump நிர்வாகத்திற்கு கடுமையான கண்டனமாக அமைகிறது .

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு வரிகளை விதிக்க Donald Trump February 2025-இல் முன்வைத்த தேசிய அவசர நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானத்திற்கு ஆதரவாக பிரதிநிதிகள் சபை 219-க்கு  211 என்ற வாக்கு வித்தியாசத்தில் வாக்களித்தது.

ஆறு குடியரசுக் கட்சியினர் வெள்ளை மாளிகையின் நிலைபாட்டை மீறி, ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஆறு குடியரசுக் கட்சியினர் Don Bacon (Nebraska), Brian Fitzpatrick (Pennsylvania), Jeff Hurd (Colorado), Kevin Kiley (California), Thomas Massie (Kentucky), Dan Newhouse (Washington) ஆகும்.

இந்த தீர்மானத்தில் வரிகளுக்கு எதிராக வாக்களித்த ஆறு குடியரசுக் கட்சியினரை Donald Trump கடுமையாக சாடியுள்ளார்.

ஜனாதிபதியின் அவசர கால அறிவிப்புகளை மறுபரிசீலனை செய்ய பிரதிநிதிகள் சபைக்கு அதிகாரம் உள்ளது.

ஆனால் இந்தத் தீர்மானம் Senate சபையில் எளிய பெரும்பான்மையால் அங்கீகரிக்கப் பட்டாலும், அவசரகால அறிவிப்பு, கட்டணங்களை நடைமுறையில் வைத்திருக்க veto அதிகாத்தை Donald Trump கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், பிரதிநிதிகள் சபை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது, தனது இரண்டாவது பதவிக்காலத்தில் வரிகளை பொருளாதாரக் கொள்கையின் மூலக்கல்லாக மாற்றிய ஜனாதிபதிக்கு அரசியல் ரீதியாக ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

Related posts

கனடா ஒரு ‘போர் வெறியர்’: ரஷ்யா விமர்சனம்

Lankathas Pathmanathan

ரஷ்யாவின் போர் குற்றங்கள் குறித்த ICC விசாரணைக்கு உதவுள்ள கனடா!

Lankathas Pathmanathan

தேர்தல் வெற்றிக்கு Trudeauவை வாழ்த்திய அமெரிக்க அதிபர்!

Gaya Raja

Leave a Comment