September 14, 2026
தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் பதவிக்கு இதுவரை எட்டு வேட்புமனுக்கள் தாக்கல்

Toronto நகர முதல்வர் பதவிக்கு எட்டு வேட்புமனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (01) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தது.

பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி நடைபெறுகிறது.

இதில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முதலாவது நாளன்று மொத்தம் எட்டு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் முதலாவது நகர முதல்வர் வேட்பாளராக நகர சபை உறுப்பினர் Brad Bradford தனது வேட்புமனுவை தாக்கல்  செய்துள்ளார்.

Beaches-East York தொகுதியின் நகர சபை உறுப்பினராக இவர் 2018 முதல் பதவி வகித்து வருகிறார்.

அவர் முன்னதாக 2023 நகர முதல்வர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, எட்டாவது இடத்தைப் பிடித்தார்.

தவிரவும் நகர முதல்வர் பதவிக்கு மேலும் ஏழு வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை இதுவரை தாக்கல் செய்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் Toronto நகர முதல்வர் Olivia Chow போட்டியிடுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Toronto நகரசபை தேர்தலுக்கான வேட்பாளர் பரிந்துரைகள் August 21-ஆம் திகதி வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வாகன நிதி மோசடிகள் குற்றச்சாட்டில் நான்கு தமிழர்கள் உட்பட 16 பேர் கைது.

Lankathas Pathmanathan

Toronto காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தப்பட்டார்!

Lankathas Pathmanathan

விமானப் பயணிகளுக்கான COVID பரிசோதனை கனடாவில் மீண்டும் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment