தேசியம்
செய்திகள்

முதலாவது Moderna தடுப்பூசி ஏற்றுமதி கனடாவை வந்தடைந்தது

முதலாவது Moderna COVID தடுப்பூசி ஏற்றுமதி இன்று (வியாழக்கிழமை) கனடாவை வந்தடைந்தது. பிரதமர் Justin Trudeau இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

Paris Franceசில் இருந்து Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த முதலாவது ஏற்றுமதியை கனடாவின் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் வரவேற்றார். கனடாவில் Moderna தடுப்பூசியின் பாவனைக்கு Health கனடா நேற்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்திருந்தது.

இந்த ஆண்டு இறுதிக்குள் கனடாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் 168,000 Moderna தடுப்பூசிகளின் ஒரு பகுதியாக இந்த ஏற்றுமதி இருப்பதாக Trudeau கூறினார். 40 மில்லியன் Moderna தடுப்பூசிகளுக்கு கனடா உத்தரவாதம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது . அமெரிக்காவை தொடர்ந்து Moderna தடுப்பூசியை அங்கீகரித்த இரண்டாவது நாடாக கனடா அமைந்துள்ளது. கனடாவில் தொற்றுக்கு எதிரான அங்கீகாரம் பெறும் இரண்டாவது தடுப்பூசி இதுவாகும்.

வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் கனடாவை வந்தடைந்த Pfizer தடுப்பூசி ஏற்கனவே கனடாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் விநியோகிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது.

Related posts

வார விடுமுறையில் தமிழர் தெரு விழா!

Lankathas Pathmanathan

இலையுதிர் காலத்தில் மற்றொரு booster தடுப்பூசியை பெற பரிந்துரை

Lankathas Pathmanathan

Stanley Cup: மூன்று கனடிய அணிகளில் ஒன்று மாத்திரம் முதலாவது ஆட்டத்தில் வெற்றி

Leave a Comment