தேசியம்
செய்திகள்

Stanley Cup: மூன்று கனடிய அணிகளில் ஒன்று மாத்திரம் முதலாவது ஆட்டத்தில் வெற்றி

Stanley Cup Playoffs தொடருக்கு தகுதி பெற்ற மூன்று கனடிய அணிகளில் ஒரு அணி மாத்திரம் முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

Atlantic பிரிவில் Toronto Maple Leafs, Pacific பிரிவில் Edmonton Oilers, Wild Cards பிரிவில் Winnipeg Jets ஆகிய கனடிய அணிகள் 2023 Stanley Cup Playoffs தொடருக்கு தகுதி பெற்றன.

இவற்றில் முதலாவது ஆட்டத்தில் Winnipeg Jets அணி மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது.

Edmonton Oilers அணி புதன்கிழமை (19) தனது இரண்டாவது ஆட்டத்தில் Los Angeles Kings அணியை எதிர்கொள்கிறது

Toronto Maple Leafs, Winnipeg Jets  அணிகளின் இரண்டாவது ஆட்டம் வியாழக்கிழமை (20) நடைபெறுகிறது.

மொத்தம் ஏழு ஆட்டங்கள் கொண்ட முதல் சுற்றில் நான்கு ஆட்டங்களில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

Related posts

Brampton நகர முதல்வர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் Patrick Brown

கனடாவில் ஒரு மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

2024 Paris Olympics: ஒன்பதாவது தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment