November 26, 2026
தேசியம்
செய்திகள்

மீண்டும் வட்டி விகிதம் 2.75% ஆக உயர வாய்ப்பு!

கனடிய மத்திய வங்கி அடுத்த மாதம் மீண்டும் வட்டி விகிதத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

December 9-ஆம் திகதி மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem வணிகங்கள் மீது செலவு அழுத்தங்கள் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளதை தொடர்ந்து இந்த கணிப்பு வெளியானது.

December 9-ம் திகதி 2026-ஆம் ஆண்டிற்கான தனது இறுதி வட்டி விகித முடிவைக் கனடிய வங்கி அறிவிக்கவுள்ளது.

இதில் வட்டி விகிதம் 2.75 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக  பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

முக்கிய வட்டி விகிதம் குறைந்த பட்சம் 0.25 சதவீதம் உயர்ந்து 2.75 சதவீதத்தை எட்டும் என BMO கணித்துள்ளது.

இந்த நிலையில் December மாதத்துடன் வட்டி உயர்வு தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என CIBC கணித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த October 28-ஆம் திகதி கனடிய  வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி 2.5 சதவீதமாக நிர்ணயித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

$15 பில்லியன் செலவைக் குறைக்குமாறு அமைச்சரவைக்கு கடிதம்

Lankathas Pathmanathan

September இறுதியில் Ontarioவில் 18 வயதிற்கு அதிகமானவர்கள் Omicron குறிப்பிட்ட தடுப்பூசிக்கு தகுதி

Lankathas Pathmanathan

சீனாவுடனான உறவுகள் தொடர்பாக வேட்பாளர் ஒருவரை தவிர்க்குமாறு Liberal கட்சியை CSIS எச்சரித்தது?

Lankathas Pathmanathan

Leave a Comment