தேசியம்
செய்திகள்

Toronto நகர மையத்தின் ஒரு பகுதியில் 12 மணிநேர மின்தடை?

Toronto நகர மையத்தின் ஒரு பகுதியில் சனிக்கிழமை (02) இரவு முழுவதும் மின்சாரம் இல்லாத நிலை அறிவிக்கப்படுகிறது.

Toronto நகர மையத்தின் ஒரு பகுதியில் சனிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் (03) இடையில் 12 மணி நேரத்திற்கு மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்படுகிறது.

Hydro One  நிறுவனத்தின் உபகரண மாற்றுப் பணிகளுக்கு உதவும் வகையில் சனி இரவு 11 மணி முதல் ஞாயிறு காலை 11 மணி வரை இந்த திட்டமிடப்பட்ட மின்வெட்டு மேற்கொள்ளப்படுவதாக Toronto Hydro  நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் Queen Street West, தெற்கே Front Street வரையும், Bathurst Street, கிழக்கே Bay Street வரையும் உள்ளடக்கிய பகுதிகளுக்குள் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குடியிருப்புகள் வணிக கட்டிடங்கள் பாதிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

Related posts

தேர்தல் பிரச்சாரத்தில் Trudeau மீது சரளைக் கல் வீச்சு – காவல்துறை விசாரணை!

Gaya Raja

200க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் காவல்துறையினரால் பறிமுதல்

Lankathas Pathmanathan

தொடரும் காட்டுத்தீ குறித்து இங்கிலாந்து மன்னர் கவலை

Lankathas Pathmanathan

Leave a Comment