தேசியம்
செய்திகள்

செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்: கனடாவில் FGT முன்னெடுக்கும் மாநாடு

அனைத்துலகத் தமிழர் பேரவையின் (Federation of Global Tamils – FGT)  இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு கனடாவில் எதிர்வரும் October மாதம் நடைபெறவுள்ளது.

செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் மாநாடு கனடாவில் எதிர்வரும் October மாதம் நடைபெறவுள்ளது.

செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் என்னும் பெயரிலான இந்த உலகத் தமிழ் ஆய்வு மாநாடு October 15 ஆரம்பமாகி 18 வரை Toronto-வில் நடைபெற உள்ளது.

இந்த மாநாடு குறித்த அறிவித்தல் சனிக்கிழமை (02) யாழ்ப்பாணம் இலங்கையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியானது.

இந்த மாநாடானது உலகம் முழுவதுமுள்ள அறிஞர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்களை ஒன்றிணைத்து செம்மொழித் தமிழ், செய்யறிவு, மெய்ப்பொருளியல், பண்பாடு, புலம்பெயர் வாழ்வு, உலகமயமாதல், வரலாறு, குமுக-பொருண்மிய மேம்பாடு ஆகிய துறைகளில் இணையிசைவுகளை ஆராய்வதற்கான அறிவியல் தளமாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது

தமிழ் அறிவியல் மரபுகளின் வரலாறு ஆழத்தையும் இன்றைய உலக்கில் அவற்றின் சமகாலப் பொருத்தத்தையும் வெளிப்படுத்தும் பல்துறை உரையாடல்களையும் ஊக்குவிப்பது இந்த மாநாட்டின் நோக்கமாக இருக்கும் என அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி தேசியத்திடம் தெரிவித்தார்.

உலகின் முன்னணி பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள், சமூகத் தலைவர்களுடன் இணைந்து இந்த சர்வதேச ஆய்வு  மாநாடு சிறப்பாக நடைபெற ஏற்பாடாகி வருகிறது.

அனைத்துலகத் தமிழர் பேரவையின் முதலாவது சர்வதேச ஆய்வு மாநாடு கடந்த வருடம் சிறப்பான முறையில் கனடாவில் நடைபெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாடு குறித்த மேலதிக விபரங்கள்:

தமிழில்:

CALL FOR PAPERS – Tamil

ஆங்கிலத்தில்:

CALL FOR PAPERS – English

Related posts

கனடாவின் Olympic புறக்கணிப்பு ஒரு கேலிக்கூத்து: சீனா விமர்சனம்

Lankathas Pathmanathan

முன்னாள் கனடிய பிரதமர் Brian Mulroney காலமானார்!

Lankathas Pathmanathan

Conservative கட்சியில் இணைய விரும்பும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்?

Lankathas Pathmanathan

Leave a Comment