November 16, 2025
தேசியம்
செய்திகள்

Ontarioவில் வாகன உரிமத் தகடுகளை புதுப்பிக்க வேண்டிய அவசியம்

Ontarioவில் வாகன உரிமத் தகடுகளை புதுப்பிக்க வேண்டிய அவசியத்தை காவல்துறையினர் வலியுறுத்துகின்றனர்.

Ontario உரிமத் தகடு புதுப்பித்தல் கட்டணத்தை March மாதத்தில் இரத்து செய்திருந்தாலும், புதுப்பித்தல் செயல்முறை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது என காவல்துறையினர் நினைவூட்டியுள்ளனர்.

வாகன உரிமத் தகடுகளை புதுப்பிக்க தவறினால் கடுமையான அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும் என OPP எச்சரித்துள்ளது.

Ontarioவில் சில வாகன ஓட்டுநர்கள் உரிமத் தகடுகளை புதுப்பிக்கத் தவறியதற்காக 500 டொலர்கள் வரை அபராதத்தை எதிர்கொண்டுள்ளனர்.

உரிமத் தகடு புதுப்பித்தல் கட்டணத்தை கைவிடுவது ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு 120 டொலர்கள் வரை சேமிக்கும் என மாகாணம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை செயல்படுத்துவது குறித்து Ontario ஆலோசிக்கிறது!

Gaya Raja

Quebec சட்டமன்றத்திற்கு எதிரான வன்முறை குறித்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் 43,142 புதிய தொற்றுகள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment