தேசியம்
செய்திகள்

கோடை காலத்தின் வெப்பமான நாட்கள் இதுவரை உணரப்படவில்லை: சுற்றுச்சூழல் கனடா

கோடை காலத்தின் வெப்பமான நாட்கள் இதுவரை உணரப்படவில்லை என  சுற்றுச்சூழல் கனடா காலநிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் .

August மாதம் வழமையை விட வெப்பமானதாக  இருக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது.

இந்த நிலையில் Toronto நகரம் உட்பட Ontarioவின் பெரும்பாலான பகுதிகளில்  வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் கனடா திங்கட்கிழமை (18) பிற்பகல் இந்த எச்சரிக்கையை வெளியிட்டது.

செவ்வாய், புதன் கிழமைகளில் கடுமையான வெப்ப நிலை உணரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை அடுத்த இரண்டு நாட்களில் 40 பாகை செல்சியஸ் வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழக்கிழமை வெப்பநிலை 29 பாகை செல்சியசாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வார இறுதியில், Manitobaவின் பெரும்பாலான பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடா வெப்ப எச்சரிக்கையை வெளியிட்டது.

வடக்கு Ontario முழுவதும் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

Related posts

வீட்டு வாடகை மீண்டும் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

213,000 பேர் CERB உதவித் தொகையை மீண்டும் செலுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளது: CRA

Lankathas Pathmanathan

சர்வதேச மாணவர்களுக்கான அனுமதி எண்ணிக்கை குறைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment