தேசியம்
செய்திகள்

கனடாவின் பரபரப்பான சர்வதேச நில எல்லை கடப்பில் போராட்டம்

அமெரிக்காவின் Detroit நகரையும் கனடாவின் Windsor நகரையும் இணைக்கும் Ambassador பாலத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் சுகாதார கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களில் ஒரு பகுதியாக திங்கள் (07) மாலை முதல் Ambassador பாலத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

தங்கள் வாகனங்களில் கனேடிய கொடிகளை தங்கியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் COVID தடுப்பூசி ஆணைகளை நிறுத்தக் கோரி கோஷங்களை எழுப்புகின்றனர் .

Ambassador பாலம் வழியாக கனடாவுக்குள் நுழையும் போக்குவரத்தை எதிர்ப்பாளர்கள் தடுக்கின்றனர்

Ambassador பாலம் கனடாவில் உள்ள பரபரப்பான சர்வதேச நில எல்லை கடப்புகளில் ஒன்றாகும்.

இது truck போக்குவரத்துக்கான முக்கிய பாதையாகும்.

முடிந்தவரை பாதுகாப்பான முறையில் போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

ஒரு தேசமாக அணிதிரளக் கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம்!

Lankathas Pathmanathan

Atlantic மாகாண பயணிகளுக்கு திறக்கப்படும் Nova Scotiaவின் எல்லைகள்!

Gaya Raja

வடக்கு Alberta முன்னாள் வதிவிட பாடசாலை பகுதியில் கல்லறைகள்?

Lankathas Pathmanathan

Leave a Comment