September 24, 2026
தேசியம்
செய்திகள்

Ontarioவில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சரிவு

Ontarioவில் COVID தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது.

திங்கட்கிழமை (07) தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,155 ஆக பதிவானது.

இவர்களில் 486 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11 இறப்புகள் சுகாதார அதிகாரிகளினால் பதியப்பட்டன.

திங்கட்கிழமை வரை 12 வயதிற்கு மேற்பட்ட Ontario வாசிகளில் 92.1 சதவீதம் பேர் ஒரு தடுப்பூசியையும், 89.5 சதவீதம் பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

Related posts

கனடாவின் குறைந்த தடுப்பூசி பெற்றவர்களின் விகிதங்கள் Prairie மாகாணங்களில் பதிவு!

Gaya Raja

கனடாவின் முதல் Hanta தொற்று உறுதி!

Lankathas Pathmanathan

இளைஞர் வேலையற்றோர் விகிதம் பல ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment