தேசியம்
செய்திகள்

B.C. துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் இரங்கல்!

Munich பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் தனது திட்டமிடப்பட்ட பயணத்தை கனடிய பிரதமர் இரத்து செய்கிறார்.

British Colombia மாகாண Tumbler Ridge பாடசாலை துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னர் திட்டமிடப்பட்ட ஜெர்மனி பயணத்தை பிரதமர் இரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற Tumbler Ridge பாடசாலை துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர் – மேலும் 25 பேர் வரை காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தின் துப்பாக்கிதாரி Jesse Strang என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஆதரவளிக்கும் அறிக்கையை பிரதமர் Mark Carney வெளியிட்டார்,

British Colombia மாகாண முதல்வர் David Eby-யுடன் தொடர்பில் இருப்பதாகவும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியுடன் இணைந்து மத்திய அரசின் பதில் நடவடிக்கையை ஒருங்கிணைத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இன்றைய நிலையில் தேவையான அனைத்து உதவிகளையும் British Colombia மாகாண அரசாங்கத்திற்கும் RCMP உட்பட அனைத்து காவல்துறை பிரிவிற்கும் வழங்குவதாக அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்

அடுத்த ஏழு நாட்களுக்கு மத்திய அரசின் கட்டிடங்களில் கனடிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் பிரதமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் புதன்கிழமை (11) சபை அமர்வுகள் இரத்து செய்யப்பட்டது.

மன்னர் Charles உட்பட உலகத் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, பின்லாந்து, நோர்வே, ஆஸ்திரேலியா உட்பட பல உலக நாடுகளின் தலைவர்கள் இந்த சம்பவத்திற்காக இரங்கல் தெரிவிக்க தன்னைத் தொடர்பு கொண்டதாகவும் Mark Carney கூறினார்.

இந்த துயரச் சம்பவம் குறித்து British Colombia மாகாண முதல்வர் David Eby, Conservative தலைவர் Pierre Poilievre, இடைக்கால NDP தலைவர் Don Davies, பசுமைக் கட்சி தலைவர் Elizabeth May கனடிய Olympic அணி உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

மாகாணம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் ஆதரவை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குமாறு British Colombia மாகாண முதல்வர் David Eby வலியுறுத்தினார்.

அனைத்து கனடியர்களும் Tumbler Ridge சமூகத்திற்காகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்யுமாறு Conservative தலைவர் Pierre Poilievre அழைப்பு விடுத்தார்.

இதனை ஒரு கொடூரமான வன்முறை என வர்ணித்த இடைக்கால NDP தலைவர் Don Davies, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதை ஒரு விபரிக்க முடியாத துயரம் என பசுமைக் கட்சி தலைவர் Elizabeth May கூறினார்.

பாதிக்கப்பட்ட அனைவருடனும் கனடிய Olympic அணி துணை நிற்கிறது என Milan Cortina Olympics போட்டியில் பங்கேற்கும் கனடிய அணி வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

தொடர்புபட்ட செய்தி:

B.C. மாகாண பாடசாலை துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி: RCMP – தேசியம்

Related posts

London வணிக வளாகத்தில் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்திய வாகன விபத்து

Lankathas Pathmanathan

COVID தொற்றை எதிர்த்துப் போராட, 1.5 மில்லியன் தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்யும் கனடா

Lankathas Pathmanathan

Ontario மாகாண சபை உறுப்பினர் மீது காவல்துறை குற்றச்சாட்டு பதிவு

Gaya Raja

Leave a Comment