September 26, 2026
தேசியம்
செய்திகள்

London வணிக வளாகத்தில் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்திய வாகன விபத்து

London Ontario வணிக வளாகத்தில் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்திய வாகன விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Sherwood Forest வணிக வளாகத்தில் உள்ள GoodLife Fitness பின்புற சுவரில் வெள்ளிக்கிழமை (12) காலை வாகனம் ஒன்று மோதியதில், பலருக்குக் காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

London வடமேற்குப் பகுதியில் நிகழ்ந்த இந்த வாகன விபத்து பெரும் இழப்புகளை ஏற்படுத்தியதாக ஆரம்பகட்ட காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து காரணமாக பலர் அவசர உதவி பிரிவினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என London  காவல்துறை தெரிவித்தது.

ஆனாலும் இதில் ஏற்பட்ட இழப்புகள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

காலை 11 மணியளவில் London சுகாதார அறிவியல் மையம் (LHSC), நிலை 1 Orange எச்சரிக்கையை செயல்படுத்தியதாகப் பொதுமக்களுக்கு அறிவித்தது.

ஒரு அவசர நிலையின் போது, புதிய நோயாளிகளைக் கவனிப்பதற்காக மருத்துவமனை தனது வழக்கமான செயல்பாட்டு முறைகளை மாற்ற வேண்டியிருக்கும் போதும் இந்த 1 Orange எச்சரிக்கை செயல்படுத்தப்படுகிறது.

Related posts

2021 தேர்தலில் குறுக்கீடு முயற்சிகள் தேர்தல் முடிவை சமரசம் செய்யவில்லை

Lankathas Pathmanathan

Proud Boys குழுவை பயங்கரவாத பட்டியலில் இணைத்த கனடிய அரசாங்கம்

Lankathas Pathmanathan

உக்ரைனை ஆதரிக்காத நிலை உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment