Ontario தனியார் கல்லூரிகளில் பரவலான OSAP மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து புதிய கடுமையான சட்டங்களை Doug Ford அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது.
தனியார் தொழில்முறை கல்லூரிகளில் மாணவர் நிதியுதவி திட்டமான OSAP நிதியில் “திட்டமிட்ட, பரவலான முறைகேடுகள்” நடந்துள்ளதை தொடர்ந்து, கண்காணிப்பு, பொறுப்பு கூறலை வலுப்படுத்தப் புதிய சட்டத் திருத்தங்களை Doug Ford அரசு அறிவிக்க உள்ளது.
எதிர்வரும் 16-ம் திகதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய சட்டத்தின் மூலம் அதிரடி மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது..
பெருமளவில் இணைய வழியாக நடத்தப்படும் படிப்புகளுக்கு இனி OSAP நிதியுதவி வழங்கப்படாது என அமைச்சர் Nolan Quinn அறிவித்துள்ளார்.
தனியார் கல்லூரிகளுக்கும், குடியேற்றம், ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் போன்ற மூன்றாம் தரப்பு அமைப்புக்களுக்கும் இடையிலான உறவுகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன.
தனியார் நிறுவனங்களில் OSAP நிதியுதவி பெறும் மாணவர் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
மாணவர்களின் கடன்களுக்கு தனியார் கல்லூரிகளை பொறுப்பாக்கி, அவர்களிடமிருந்து OSAP பணத்தைத் திரும்பப் பெறும் அதிகாரம் அரசுக்கு வழங்கப்படுகிறது.
இதில் விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதங்களும் விதிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
ஏற்கனவே 30-க்கும் மேற்பட்ட உறுப்பினர் கல்லூரிகள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், புத்தாண்டில் தகுதியான மாணவர்களுக்கு OSAP நிதியை மீண்டும் வழங்க முயற்சிப்பதாகவும், அதுவரை குறைந்த வட்டியில் கடன் வழங்க வங்கிகளுடன் பேசி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளன.
Doug Ford அரசின் கண்காணிப்பு தோல்வியால் பெருமளவில் பணம் வீணடிக்கப்பட்டதோடு, நேர்மையான ஆயிரக்கணக்கான மாணவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
