Stellantis – Roshel விற்பனை குறித்து இரு நிறுவனங்களும் பிரதமர் அலுவலகம் , அமைச்சர் Mélanie Joly அலுவலகத்துடன் சந்திப்புகளை நடத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Brampton Assembly ஆலையை பாதுகாப்புத் துறை வாகனங்களை தயாரிக்கும் Roshel நிறுவனத்திற்கு Stellantis நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
இந்த விற்பனைக்கு முன்பாக, இரு நிறுவனங்களும் பிரதமர் அலுவலகம் (PMO), தொழில்துறை அமைச்சர் Mélanie Joly அலுவலகத்துடன் சந்திப்புகளை நடத்தியுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, இந்த விற்பனை ஒப்பந்தத்தில் அமைச்சர் Mélanie Joly பங்கேற்கவில்லை என அவரது அலுவலகம் மறுத்திருந்த போதிலும், பிரதமர் அலுவலகம், அமைச்சக அதிகாரிகளுடன் இரு நிறுவனங்கழும் சந்திப்புகலை நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Brampton ஆலை விற்பனைக்கு முன் Roshel நிறுவனத்துடன் பிரதமர் அலுவலகம், அமைச்சர் Melanie Joly அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் இரகசிய சந்திப்புகளை நடத்தியது மத்திய Lobbying பதிவேட்டின் மூலம் தெரியவந்துள்ளது.
Stellantis Assembly ஆலையை கொள்வனவு செய்வதாகக் கவச வாகனத் தயாரிப்பு நிறுவனமான Roshel அறிவிப்பதற்கு முன்பாகவே, தொழில்துறை அமைச்சர் Mélanie Joly அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளும், பிரதமர் Mark Carney அலுவலகத்தின் உயர்மட்ட ஆலோசகர் ஒருவரும் Roshel நிறுவனத்தை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என்பது தற்பொழுது ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது.
மத்திய Lobbying பதிவேட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி இந்த முக்கியத் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமைச்சர் Mélanie Joly அலுவலகத்தைச் சேர்ந்த நான்கு உயர்மட்ட ஆலோசகர்கள் கடந்த August, September மாதங்களில் Roshel நிறுவன பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர்.
இந்த இரு சந்திப்புகளிலும் அமைச்சரின் அப்போதைய தலைமை அதிகாரி Paul Moen, கொள்கை இயக்குநர் David McFarlane ஆகிய இருவரும் பங்கேற்றுள்ளதை அரசாங்க பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
அதனைத் தொடர்ந்து, அதே இரண்டு மூத்த அதிகாரிகள் கடந்த October 15-ம் திகதியும் Roshel நிறுவனத்துடன் மீண்டும் ஒருமுறை சந்திப்பை நடத்தியுள்ளனர்.
ஆலை விற்பனை அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் அமைச்சர் Roshel நிறுவனத்தைச் சந்திக்கவில்லை என Mélanie Joly அலுவலகம் புதன்கிழமை (11) Canadian Press ஊடகத்திடம் தெரிவித்திருந்தது.
ஆனால், அமைச்சரின் மூத்த அதிகாரிகள் குழு Roshel நிறுவனத்துடன் நடத்திய சந்திப்புகள் அமைச்சரின் அனுமதியுடன் நடந்தனவா அல்லது அது குறித்து அமைச்சருக்கு விளக்கப்பட்டதா என்ற கேள்விக்கு அவரது அலுவலகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.
தவிரவும் பிரதமர் Mark Carney அலுவலகத்தின் மூத்த சர்வதேச விவகார ஆலோசகர் Matthew Hall கடந்த October 15-ம் திகதி Roshel நிறுவன பிரதிநிதிகளை சந்தித்துள்ளதை Lobbying பதிவேடு உறுதிப்படுத்துகிறது.
அந்தக் கூட்டத்தில் Roshel நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Roman Shimanov நேரில் கலந்துகொண்டதாக இரு நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து பிரதமர் அலுவலகம் உடனடியாக எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
September மாதத்தில் மட்டும் Stellantis நிறுவனத்துடன் கனடிய மத்திய அரசு 10 உயர்மட்ட சந்திப்புகளை நடத்தியுள்ளதை Lobbying பதிவேடு உறுதிப்படுத்துகிறது.
September 29-ம் திகதி நடைபெற்ற இறுதிக்கட்ட சந்திப்பில் பிரதமர் அலுவலகத்தின் துணை தலைமை அதிகாரி Tim Krupa, தொழில்துறை அமைச்சர் Mélanie Joly, Paul Moen, David McFarlane ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
Stellantis நிறுவனம் தொடர்பான Lobbying பதிவேடு September மாதம் வரை மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளது;
October மாதத்தில் நடந்திருக்கக்கூடிய சந்திப்புகள் இதில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அரசாங்கத்தால் கோரப்பட்ட சந்திப்புகளும் இந்தப் பதிவேட்டில் பட்டியலிடப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
