தேசியம்
செய்திகள்

London வணிக வளாக விபத்தில் ஏழு பேர் காயம்

London Ontario வணிக வளாகத்தில் ஏழு பேர் காயமடைந்த வாகன விபத்து நிகழ்ந்துள்ளது.

Sherwood Forest வணிக வளாகத்தில் உள்ள GoodLife Fitness பின்புற சுவரில் வெள்ளிக்கிழமை (12) காலை வாகனம் ஒன்று மோதியதில் ஏழு பேர் காயமடைந்தனர்.

London வடமேற்குப் பகுதியில் நிகழ்ந்த இந்த வாகன விபத்தில் காயமடைந்தவர்கள் வாகன சாரதியும் அடங்குகிறார்.

காயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து நிகழ்ந்த நேரம் சுமார் 30 பெண்கள் ஒரு புதிய உடற்பயிற்சி வகுப்பில் பங்கேற்றிருந்தனர் என தெரியவருகிறது.

Related posts

வெடிகுண்டு மிரட்டல் “நம்பகத்தன்மையற்றது”: மீண்டும் திறக்கப்பட்ட St. John சர்வதேச விமான நிலையம்

Lankathas Pathmanathan

குழந்தை நலன் தொடர்பான தீர்வின் நீதித்துறை மதிப்பாய்வு தாக்கல்

Lankathas Pathmanathan

கடமையில் உயிர் நீத்த காவல்துறை அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற முன்றலில் அஞ்சலி!

Lankathas Pathmanathan

Leave a Comment