தேசியம்
செய்திகள்

COVID தொற்றை எதிர்த்துப் போராட, 1.5 மில்லியன் தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்யும் கனடா

Pfizer, Merck நிறுவனங்களுடன் COVID தொற்றின்  எதிர்ப்பு மருந்துகளுக்காக கனடா ஒப்பந்தம் செய்கிறது.
மத்திய அரசாங்கம் Pfizer, Merck நிறுவனங்களுடன் COVID தொற்றின் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
ஒரு மில்லியன் Pfizer எதிர்ப்பு மாத்திரைகளுக்கும் 500,000 Merck எதிர்ப்பு மாத்திரைகளுக்கும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சர் Filomena Tassi அறிவித்தார். இந்த தயாரிப்புகளுக்கு Health கனடா இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மருந்துகள் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்டவுடன், அவற்றை மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும்   கொண்டு செல்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் எனவும் Tassi கூறினார்.

Related posts

முன்னாள் Richmond Hill நகர முதல்வர் காலமானார்

Lankathas Pathmanathan

Greenbelt திட்டம் குறித்த RCMP விசாரணை ஆரம்பம்!

Lankathas Pathmanathan

முகமூடிகள் மேலும் இரண்டு மாகாணங்களில் கட்டாயமாகின்றது!

Gaya Raja

Leave a Comment