February 13, 2025
தேசியம்
செய்திகள்

Ontario மாகாண சபை உறுப்பினர் மீது காவல்துறை குற்றச்சாட்டு பதிவு

பொது முடக்கத்திற்கு எதிரான போராட்டத்தை  ஏற்பாடு செய்த Ontario மாகாண சபை உறுப்பினர் மீது OPP குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

சுயாதீன மாகாண சபை உறுப்பினர் Randy Hillier மீது இந்த குற்றச்சாட்டு பதிவானது.  இந்த மாதம் 8ஆம் திகதி Kemptville நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இந்த எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.  COVID கட்டுப்பாடுகளை மீறி இந்த எதிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக Hillier மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

COVID கட்டுப்பாடுகளை மீறியதாக  குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் மாகாண சபை உறுப்பினர் Hillierரும்  ஒருவராவார். இதில் குற்றம் சாட்டப்பட்ட ஏனைய மூவர் Hillierரின் இரண்டு மகன்கள் மற்றும் அவரது மகள் என தெரியவருகின்றது.

Related posts

அமெரிக்க மதுபான விற்பனையை நிறுத்த மூன்று கனடிய மாகாணங்கள் முடிவு

Lankathas Pathmanathan

முதலாவது தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது கனடா

Lankathas Pathmanathan

கனேடிய எல்லைத் தொழிலாளர்கள் August 6 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம்!

Gaya Raja

Leave a Comment