தேசியம்
கட்டுரைகள்

அடுத்த தேர்தலுக்கான வாக்குகளை இலக்கு வைக்கும் வரவு செலவுத் திட்டம்!

கனேடிய அரசாங்கத்தின் COVID தொற்று காலத்தின் 720க்கும் மேலான பக்கங் களைக்கொண்ட வரவு செலவுத் திட்டத்தை புரட்டிப் படிக்கையில், ஒருவகை மரத்துப்போன உணர்வே ஏற்படும். April மாதம் 29ஆம் திகதி வௌியான 2021 ஆம் ஆண்டிற்கான நிதி வரைபடத்தின் 280 கையேடுகளில் வழக்கமாக மில்லியன் கணக்கான டொலர்கள் ஒதுக்கப்படும் கட்டத்தில் மேலதிகமாக இன்னுமொரு பூச்சியம் சேர்க்கப்பட்டு பில்லியனாக்கப்பட்டுள்ளது.

செலவினத்தை பொறுத்தவரைக்கும் இதுவொரு கொள்ளை நோய் பரவல் போன்ற நிகழ்வாகும். நிதியமைச்சர் Chrystia Freelandடின் முதல் வரவு செலவு திட்டத்தில், வாக்களிப்பு நிலையத்திற்குள் Liberal கட்சிக்கான ஆதரவுச் சாய்வுடன் நுழையும் எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஏதோவொன்று இருந்தது.
சில நகர்வுகள் முன்னேற்றமானவையாய் இருந்தன, ஏனையவை புரட்சிகரமானவையாய் இருந்தன. Wine துறையினர், விவசாயிகள், ஒவ்வொரு சிறுபான்மைச் சமூகத்தையும் சார்ந்த தொழில்முனைவோர், CBC ஆகியோருக்கான ஊக்குவிப்புத் திட்டங்கள் மற்றும் சிறிய கைவினைத் துறைமுகங்களை சரிப்படுத்துவதற்கான பழைய தேர்தல் நலன்கள் ஆகியன முன்னேற்றமானவை எனும் வகையறாவில் அடங்கும்.

புரட்சிகரமான தனித்துவ நகர்வு அடுத்து வருகிறது: கனேடிய பிறப்புரிமையையே ஒரு மருத்துவக்காப்புறுதி போல் மாற்றக்கூடிய, ஒரு நாளைக்கு 10 டொலர்களை குழந்தை பராமரிப்பிற்கு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு 30 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பின்னர் அதைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம். அதற்கு முன், தர்மசங்கடம் எழுகின்ற வரவு செலவுத் திட்டத்தின் கடைசிப் பக்கங்களில் புதைக்கப்பட்டுள்ள கெடுதியான விபரங்களை பார்க்க வேண்டியுள்ளது. பெருந்தொற்றின் பேரழிவிலிருந்து கனடாவைக் காப்பாற்றுவதற்காக 354 பில்லியன் டொலர்களை பற்றாக்குறை நிதியாக Freeland தனது வரவு செலவுத் திட்டத்தில் முன்கூட்டியே அறவிட்டுள்ளார்.

ஆனால், வரவு செலவுத் திட்டம் முன்வைத்துள்ள ஆவணமானது, கனேடிய பொருளாதாரம் மீண்டும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டதாகவும் மீள் எழுச்சி ஏற்கனவே ஆரம்பித்து விட்ட தாகவும் அறிவிக்கிறது. உண்மையில், பொருளாதார எதிர்வுகூறல்கள் 6 மாதங்களுக்கு முன்பு இருந்த இடத்தை விட மிதமான வளர்ச்சியையே காட்டுகின்றன. 4.8 சதவீத பொருளாதார வளர்ச்சி அதீத முயற்சியின் காரணமாக 5.8 சதவீதத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இது பொருளாதார நடவடிக்கையின் நின்று நிலைக்காத ஓலமாகும்.

பெருந்தொற்றுக்கு முந்திய மட்டத்திற்கு வேலையின்மை விகிதம் வீழ்ச்சியடைவதால், அடுத்தவருடத்தில் மேலும் 4 வீதம் துரிதமாக அதிகரிக்கும். உண்மையில், உள்ளூர புகைந்துகொண்டிருக்கும் அழிவடைந்த பொருளாதார இழப்பை ஈடு செய்து அரச நிதியைக் கட்டியெழுப்பும் முயற்சியில், 20களின் பொருளாதார வளர்ச்சியை மீண்டும் இயக்க Freeland எண்ணியுள்ளதாக தோன்றுகிறது. 70 முதல் 100 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாக அவர் கடந்த இலையுதிர் காலத்தில் தெரிவித்த போது, அவர் போட்டுக்கொண்ட எல்லைக்குள் அதனை அவரால் மட்டுப்படுத்த முடியவில்லை. வெளி எல்லையைத் தாண்டி 1.4 பில்லியன் டொலர்களுக்கு நிதி காப்பு மட்டம் அதிகரித்தது. முன்னெப்போதும் இல்லாத சுகாதார பயங்கரத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர்.

அவர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத ஆதரவு தேவைப்படுகிறது.
மூன்றாவது அலை அத்தியாவசிய சேவையில் அல்லாத பணியாளர்களை வீட்டிலேயே தங்கியிருக்கும் வாழ்க்கை முறைக்குள் கொண்டு செல்கையில், வீட்டில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவித் திட்டங்களை விரிவாக்குவது நியாயமானது.
குழந்தை பராமரிப்பு உதவி என்பது Liberal கட்சியின் பல தசாப்தங்களுக்கு முந்திய ஒரு
உறுதிமொழியாகும். துணைவர்கள் பணிக்குத் திரும்ப உதவுவதன் அவசியத்தை தற்போது இந்த பெருந்தொற்று வௌிப்படுத்தியுள்ளது.


மாகாண கூட்டாண்மையுடன் ஆரம்பிக்கப்பட்டுவிட்டால் அது ஒருபோதும் அகற்றப்படாது எனும் நிலையில், அரசாங்கம் முதலீடு செய்யும் ஒவ்வொரு டொலருக்கும் 6 டொலர்கள் வரை திரும்பக் கிடைக்கச் செய்யும் ஒரு திட்டத்தை ஆரம்பிக்க ஏன் இவ்வளவு காலம் எடுக்கிறது என நாம் ஆச்சரியப்படக் கூடும்.

இதற்கிடையில், பற்றாக்குறை செலவினங்களின் சரிவினால், விசித்திரமாக சில பெருந்தொற்று உயிரிழப்புகள் கவனிக்கப்படவில்லை.முதன்முறையாக வீடு வாங்க விரும்புபவர்கள் வீட்டு மனை விலையில் ஏற்பட்ட கடுமையான உயர்வு காரணமாக துரதிர்ஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

தேசிய மருந்துக் காப்புறுதிக்கான ஆதரவு தொடர்கிறது. தொற்றுடன் போராடும் மாகாணங்களுக்கு உதவும் வகையான சுகாதார இடமாற்றங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஏனென்றால், மாகாண அதிகார வரம்புக்குட்பட்ட பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவது கூட்டாட்சி தர அடையாள வௌிச்சத்தில் பிரகாசிக்காது.

ஆனால் இது ஒரு செம்மையான வரவு செலவுத் திட்டம் போன்றது அல்ல. இது பொருளாதார ஊக்குவித்தலை விட சமூக பொறியியலில் வேரூன்றிய ஒரு ஆவணம். ஒன்று பொருளாதாரத்தை பசுமை நிற நிழல்களுடன் வரைவது, மற்றையது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ஒருங்கிணைந்த எதிர்ப்பால் தோற்கடிக்கப்படும் அபாயத்திலிருந்து தப்பித்துக்கொள்வது.

Liberal கருத்தியல் கனவுகளின் செலவீனங்களைத் தொடங்க பெருந்தொற்று பீதியை Justin Trudeau அரசாங்கம் பயன்படுத்துகிறது. வாக்காளர்கள் இப்போதே பயப்படுகிறார்கள் என்பதையும், மூன்றாவது அலையினால் ஏற்பட்ட துயரங்களுக்கு மாகாணத் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது அதிகரிப்பதையும் அவர்கள் அறிவார்கள். இந்த உதவியற்ற காலங்களில் வாக்காளர்கள் அரசாங்க உதவிக்கு பரவலாகக் காத்திருப்பதையும் தமது எதிர்காலச் சந்ததி அந்தக் கடனை எவ்வாறு அடைக்கும் என்பது குறித்து அவர்கள்
கவலைப்பட விரும்பவில்லை என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள்.

இந்த ஆவணம் எதையாவது உரக்கக் கூறினால், அது உண்மையில் தளர்வுற்றுள்ள பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கானது அல்ல. இந்த கோடை அல்லது இலையுதிர் காலத்தில் ஆரம்பிக்க அவர்கள் எதிர்பார்த்துள்ள தேர்தல் பிரசாரத்திற்கானது. அது தான் இங்கே முக்கியமானது!

மூலம்: Don Martin
தமிழில்: Bella Dalima

(தேசியம் சஞ்சிகையின் April 2021 பதிப்பில் வெளியான கட்டுரை)

Related posts

முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலை ;உண்மையும் நல்லிணக்கமும்

Gaya Raja

2021 Ontario மாகாண வரவு செலவு திட்டம் – ஒரு பார்வை

Gaya Raja

தேர்தல் களத்தில் அதிக பெண்கள் மற்றும் பாலின வேறுபட்ட வேட்பாளர்கள்!

Gaya Raja

Leave a Comment