தேசியம்
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை மசோதாவை நிறைவேற்றுங்கள்: NDP

Bill 104 எனப்படும் தமிழ் இனப்படுகொலை மசோதாவை நிறைவேற்றுமாறு Ontario மாகாண எதிர்கட்சியான NDP அரசாங்கத்தை வலியுறுத்தியது.

இந்த விடயம் குறித்து Ontarioவின் பிரதான எதிர்க்கட்சியின் சட்டமன்றத் தலைவர் Peggy Sattler அரசாங்கத்தின் சட்ட மன்றத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த மசோதாவுக்கு NDP தனது முழுமையான ஆதரவை வழங்கும் என அந்த கடிதத்தில் Sattler உறுதியளித்துள்ளார்.

இந்த மசோதாவை மூன்றாவது வாசிப்புக்கு கொண்டு வருவதன் மூலம் இந்த மசோதாவை சட்டமாக்கலாம் என Peggy Sattler தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

புதிய Toronto நகர முதல்வருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

Lankathas Pathmanathan

COVID -19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.

thesiyam

இந்த ஆண்டு தேர்தல் இல்லை: Ontario முதல்வர்!

Lankathas Pathmanathan

Leave a Comment