தேசியம்
செய்திகள்

2026 குளிர்கால Olympics போட்டியில் கனடா!

2026 குளிர்கால Olympics போட்டியில் 207 விளையாட்டு வீரர்களுடன் கனடா பங்கேற்கிறது.

வெள்ளிக்கிழமை (6) ஆரம்பமான 2026 Milan Cortina Olympics போட்டிகள் February 22 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

இதில் கனடா சார்பில் 99 ஆண்கள், 108 பெண்கள் என மொத்தம் 207 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இது குளிர்கால Olympics போட்டியில் கனடாவின் 25-வது பங்கேற்பாகும்.

இதன் மூலம் 1924-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Olympics போட்டிகளிலிருந்து கனடா அனைத்து போட்டிகளில் பங்கேற்றுள்ளது.

இம்முறை Mikaël Kingsbury, Rachel Homan, Connor McDavid, William Dandjinou, Éliot Grondi, Piper Gilles and Paul Poirier, Abigail Strate, Reece Howden, Sarah Fillier, Hallie Clarke ஆகியோர் கனடாவுக்காக பதக்கம் வெல்ல கூடியவர்கள் என எதிர்வு கூறப்படுகிறது.

கடந்த முறை நடைபெற்ற 2022 Beijing குளிர்கால Olympics போட்டியில் கனடா பங்கேற்று மொத்தம் 26 பதக்கங்களை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடிய இராணுவ உறுப்பினர் பனிச்சரிவில் இறந்ததாகக் கருதப்படுகிறது

Lankathas Pathmanathan

2023ஆம் ஆண்டு வரை hybrid முறையில் நாடாளுமன்ற அமர்வுகள் தொடரும்

Lankathas Pathmanathan

கனடாவில் அதிகரிக்கும் யூத எதிர்ப்பு சம்பவங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment