Ontario மாகாண சீர்திருத்த அதிகாரியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக Toronto காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாகவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உதவியதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகளுக்கு தனிப்பட்ட தகவல்களைக் கசியவிட்டதாகவும், சீர்திருத்த அதிகாரியைக் கொலை செய்ய சதித்திட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைச் செய்தவர்களுக்கு உதவியதாகவும் காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விசாரணையில் ஏழு Toronto காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டது பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட விசாரணையில் ஏழு Toronto காவல்துறை அதிகாரிகளும் ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
ஒரு மாகாண சீர்திருத்த அதிகாரியை அவரது வீட்டில் கொல்ல முயன்றதாக கூறப்படும் June 2025 சம்பவத்தைத் தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பமானது.
Project South என பெயரிடப்பட்ட இந்த ஏழு மாத விசாரணையை தொடர்ந்து குறைந்தது 19 சந்தேக நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Toronto காவல்துறையுடன் இணைந்து York பிராந்திய காவல்துறை இந்த விசாரணை முடிவுகளை வியாழக்கிழமை (05) காலை வெளியிட்டது.
பல Toronto காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு தனிப்பட்ட தகவல்களை கசியவிட்டதாக York பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரி Jim MacSween கூறினார்.
இதில் சந்தேக நபர்களாக York பிராந்திய காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்ட Toronto காவல்துறை அதிகாரிகள்
Barnhardt – Toronto காவல்துறை காவலர்
Robert Black – Toronto காவல்துறை அதிகாரி (sergeant )
John Madeley (Sr.) – Toronto காவல்துறை காவலர் (ஓய்வு பெற்றவர்)
John Madeley (Jr.) – Toronto காவல்துறை காவலர்
Carl Grellette – Toronto காவல்துறை அதிகாரி (sergeant )
Saurabjit Bedi – Toronto காவல்துறை காவலர்
Derek McCormick – Toronto காவல்துறை காவலர்
Elias Mouawad – Toronto காவல்துறை காவலர்
கைது செய்யப்பட்ட ஏழு அதிகாரிகளும் அவர்களில் பதவியில் இருந்து தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என பத்திரிகையாளர்
சந்திப்பில் Toronto காவல்துறை தலைவர் Myron Demkiw கூறினார்.
இந்த சம்பவம் காரணமாக தான் பதவி விலக கோரப்படவில்லை எனத் தெரிவித்த Myron Demkiw, இந்த சூழ்நிலை ஏற்படுத்திய அவநம்பிக்கையை ஒப்புக் கொண்டார்.
“இது காவல்துறைக்கு மிகவும் ஏமாற்றமளிக்கும், சோகமான நாள்” என York பிராந்திய காவல்துறை தலைவர் Jim MacSween குறிப்பிட்டார்.
தனது 28 ஆண்டுகால வாழ்க்கையில் மிகவும் சவாலான ஒரு விசாரணை இது எனவும் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இதில் ஈடுபட்டதாகவும் Toronto காவல்துறையின் துணைத் தலைவர் Deputy Chief Ryan Hogan கூறினார்.
இவர்களில் York, Toronto, Ontario மாகாண காவல்துறை அதிகாரிகளும் அடங்குகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தொடர்புப்பட்ட ஏனைய நீதிமன்ற வழக்குகள் சமரசம் செய்யப்பட்டதற்கான எந்த ஆதரவும் இதுவரை இல்லை என காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்த விசாரணையில் பொதுமக்கள் ஏழு பேரும் சந்தேக நபர்களாக காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த ஏழு பேரில் மூவர் சீர்திருத்த அதிகாரியை அவரது வீட்டில் கொல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏனைய நான்கு பொதுமக்கள் மீது சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நபர்களில் சிலர் மிரட்டி பணம் பறிக்கும் சதியின் ஒரு பகுதியாக காவல்துறையிடமிருந்து தனிப்பட்ட தகவல்களை பெற லஞ்சம் வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த சந்தேக நபர்களில் ஒருவரான Brian Da Costa, போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதில் கைதான எவருக்கும் எதிரான குற்றசாட்டுகள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
