September 22, 2026
தேசியம்
செய்திகள்

கனடா-Alberta ஒப்பந்தத்தை மீளப்பெற அழைப்பு?

கனடா-Alberta குழாய் திட்ட ஒப்பந்தத்தை மீளப்பெற முதற்குடிகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.
புதிய எரிசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கனடிய மத்திய அரசாங்கமும், Alberta மாகாண அரசும் கடந்த வாரம் வியாழக்கிழமை (27) கையெழுத்திட்டன.
இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் British Columbia வழியாககுழாய் திட்ட பாதைக்கு வழி வகுக்கிறது.
இதற்கான ஒப்பந்தத்தை திரும்பப் பெறக் கோரி முதற்குடிகளின் தலைவர்கள் சபை செவ்வாய்கிழமை (02) ஏகமனதாக வாக்களித்தது.
அதேவேளை குழாய் திட்ட முயற்சியை கடுமையாக எதிர்க்கும் British Columbia முதற்குடி தேசத்திற்கு முழு ஆதரவையும் முதற்குடிகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த வாரம் நூற்றுக்கணக்கான முதற்குடிகளின் தலைவர்கள் தலைநகர் Ottawa-வில் வருடாந்த கூட்டத்திற்காக சந்திக்கின்றனர்.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட குழாய் திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த மாநாட்டில் செவ்வாய் பிற்பகல் கலந்து கொண்டு பிரதமர் Mark Carney உரையாற்றினார்.
பின்னர் கேள்வி நேரத்தில் பிரதமரிடம் முதற்குடிகள் தலைவர்கள் பலரும் கடுமையான கேள்விகளை முன்வைத்தனர்.
கடந்த April மாதம் சிறுபான்மை அரசாங்கத்தை வெற்றி பெற்ற பின்னர்  Mark Carney முதற்குடிகள் தலைவர்கள் சபை மாநாட்டில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
LJI Reporter ரம்யா சேது

Related posts

Scarborough மதுபான விடுதி துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயம்

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Lankathas Pathmanathan

Saskatchewan கத்தி குத்து சம்பவங்களில் பத்து பேர் மரணம் – 15 பேர் காயம்!

Lankathas Pathmanathan

Leave a Comment