தேசியம்
செய்திகள்

கனடிய  சீக்கிய தலைவர் கொலை குற்றவாளிகளின் அடுத்த நீதிமன்ற விசாரணை June 25

கனடிய  சீக்கிய தலைவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இந்தியர்கள் சமூக உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என உத்தரவிடப்பட்டது.

British Columbia சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொலையின் குற்றவாளிகளான Karan Brar, Kamalpreet Singh, Karanpreet Singh, Amandeep Singh ஆகியோர் செவ்வாய்க்கிழமை (21) நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

இவர்களின் அடுத்த நீதிமன்ற விசாரணை June 25 வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியாவில் சுதந்திரமான சீக்கிய நாடு அமைப்பது குறித்து வெளிநாடுகளில் வாக்களிக்கும் முயற்சியின் முக்கிய தலைவராக  Hardeep Singh Nijjar இருந்தார்.

அவர் கடந்த ஆண்டு June மாதம் Surrey நகரில் உள்ள சீக்கிய கோவில் வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையில் இந்திய அரசாங்கத்தின் தலையீடு உள்ளதாக நம்பகமான உளவுத்துறை தகவல்களை கனடிய பிரதமர் Justin Trudeau வெளியிட்டார்.

ஆனாலும் இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்து வருகிறது.

Related posts

கனடாவில் மயில்வாகனம் நிமலராஜனின் இருபத்தைந்தாவது ஆண்டு நினைவேந்தல்

Lankathas Pathmanathan

83 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் Ontarioவில் தடுப்பூசியை பெற்றனர்!

Gaya Raja

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகும்: பிரதமர் எதிர்பார்ப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment