தேசியம்
செய்திகள்

தொடர் கொலையாளி Robert Pickton நிலை குறித்து அடுத்த சில நாட்களில் மதிப்பிடப்படும்

British Colombia மாகாண தொடர் கொலையாளி Robert Pickton இந்த வார இறுதி வரை மருத்துவ ரீதியாக கோமா நிலையில் இருப்பார் என அறிவிக்கப்படுகிறது.

74 வயதான Robert Pickton, Quebec சிறையில் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளான நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

அவரது நிலை குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் மருத்துவர்கள் மதிப்பிடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவரை தாக்கிய 51 வயதான சந்தேக நபர் தொடர்ந்து இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் அதிகாரிகள் கூறினர்.

Related posts

கனடிய தூதர் ஹெய்ட்டியில் தொடர்ந்து தங்கி இருப்பார்?

Lankathas Pathmanathan

ரஷ்ய தூதரக விருந்தில் கனேடிய பிரதிநிதி கலந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது: பிரதமர் Trudeau

மாகாண விவகாரங்களில் மத்திய அரசின் தலையீடு மறுக்கப்படுகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment